Aarudhra Gold Pvt Ltd scam: பிரபல தொழிலதிபர் துபாயில் கைது!

Advertisements

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் துபாயில் பிடிபட்டார்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜன், பேச்சி முத்துராஜா, நடிகர் ரூஸோ உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர். மொத்தம் 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர வங்கிக் கணக்கில் இருந்த ரூ.96 கோடி முதலீடு, ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜசேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்லாட் ஒப்பந்தப்படி துபாயில் பதுங்கி இருந்த ராஜசேகரை பிடித்து தருமாறு தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கோரிக்கை வைத்திருந்தது. நிர்வாக இயக்குநர் ராஜசேகரை தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கையின் அடிப்படையில் துபாயில் கைது செய்யப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *