
இண்டியா கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டோம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே கூட்டணியில் இணைந்தோம் என்று ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணாப்பாளரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள 16 கட்சிகள் பிரதமருக்கு கடிதமும் எழுதின. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடிக்கு தனியாக கடிதம் எழுதியது.
ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடியே பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும், முன்னதாக கூட்டத்தொடர் கூடாது என்று எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில் இண்டி கூட்டணியில் இருந்து முற்றிலும் விலகி விட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஊடக பொறுப்பாளர் அனுராக் தண்டா சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது; திரைக்குப் பின்னால் தான் பா.ஜ., காங். இடையே கூட்டணி உள்ளது. பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக நன்மை பயக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் செய்கிறார். அதற்கு பதிலாக, ராகுல், சோனியா குடும்பங்களை சிறைக்கு செல்வதில் இருந்து காப்பாற்றுகிறார்.
மக்களுக்குத் தேவையான கல்வி, இட ஒதுக்கீடு, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நாட்டு மக்களுக்கு தருவதில் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. நாட்டின் அரசியலை சுத்தப்படுத்த, திரைக்கு பின்னால் கூட்டணி வைத்துள்ள இந்த கட்சிகளின் கூட்டுச்சதியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.ராகுல், மோடி இருவரும் மேடைகளில் வேண்டுமானால் எதிரிகளாக தோன்றலாம். ஆனால் அரசியலில் நீடிக்க இருவரும், ஒருவருக்கொருவர் உதவி செய்து உத்தரவாதம் அளிப்பவர்களாக மாறிவிட்டனர்.
காங்கிரசின் பலவீனமான அரசியல் பா.ஜ.,வை அதிகாரம் செய்கிறது. அதே நேரத்தில் பா.ஜகவின் ஆட்சி காங்கிரஸ் கட்சியின் ஊழலை மறைக்கிறது ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணாப்பாளரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இண்டியா கூட்டணி பலவீனம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
