
கரீபியன் நாடுகளில் ஒன்றான கியூபாவின் தலைநகர் ஹவானாவின் 506-வது ஆண்டு நிறைவு தினம் கடந்த நவம்பர் 16-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஹாவானாவின் 506-வது ஆண்டை கொண்டாடும் வகையில் அந்நகரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஹவானா நகரின் கடற்கரை சாலையில் மாபெரும் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பங்கேற்று ஸ்கேட்டிங் செய்து அசத்தினர். சுமார் 42 கி.மீ. தூரத்தை இலக்காக கொண்டு இந்த ஸ்கேட்டிங் மாரத்தான் நடத்தப்பட்டது. இதனை கண்டு ரசித்த பார்வையாளர்கள், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். ஸ்கேட்போர்டிங், ஸ்பின்னிங், ஸ்கேட்கிராஸ் மற்றும் ஸ்பீட்ஸ்கேட்டிங் உள்ளிட்ட பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


