
வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்குத் தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பாராத இயற்கைப் பாதிப்பில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் தலா 10 இலட்சம் இழப்பீடு அறிவித்த திராவிட மாடல் திமுக அரசு, மக்கள் பசி தீர்க்கும் உயர் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த பெண்களின் குடும்பத்துக்கு வெறும் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது நியாயமா? என்று வினவியுள்ளார்.
இன்னுயிரை இழந்துள்ள பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாயும், பார்வை இழந்தவருக்கு 25 இலட்ச ரூபாயும் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.




