
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தனது சகோதரியின் கண்ணெதிரே திருவண்ணாமலை காவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆயுத பூஜைக்கு வாழைப்பழங்களை விற்க ஆந்திர மாநிலத்தில் இருந்து மினி லாரியில் வாழைப்பழம் லோடு ஏற்றிக் கொண்டு ஓட்டுனர் மற்றும் அவருடன் இரண்டு பெண்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர்.
அப்போது ஏந்தல் புறவழிச்சாலையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் சுரேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த காவலர்கள், வாகனத்தில் இருந்த இரண்டு பெண்களையும் தனியா அழைத்து சென்று, ஏந்தல் பகுதியில் உள்ள தோப்பில் சகோதரியின் கண்ணெதிரே மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திருவண்ணாமலை மகளிர் போலீசில் பெண்கள் புகார் அளித்தனர். பின்னர் காவலர்கள் சுரேஷ், சுந்தர் ஆகியோர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வியாபாரத்திற்கு வந்த பெண்ணை காவலர்கள் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்ராங்க.ஆளும் தி.மு.க. ஆட்சியில் தமிழக பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. பிற மாநில பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் அழியா களங்கமாக இருக்கு.இப்படி மக்களை பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூரத்தின் உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களால் பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார். இந்த வெட்கக்கேடான நிலைக்கு தி.மு.க., அரசு தலைகுனிய வேண்டும்.மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல் துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களை இந்த அரசு தள்ளியுள்ளது என அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சகோதரிகளை விட குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது . தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
