ஜம்முகாஷ்மீரின் பகல்காமில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கிய அரசியலமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவு 2019ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்கள் படிப்படியாகக் குறைந்து அமைதி நிலவி வந்தது.
இந்நிலையில் கேரளம், கர்நாடகம், அரியானா, மேற்குவங்கம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பகல்காமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அங்குத் துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை மிரட்டி ஆண்களை அரையாடைகளைக் கழற்றச் சொல்லியும், அடையாள அட்டைகளைக் காட்டச் சொல்லியும் இந்துவா? முஸ்லீமா? எனக் கேட்டு அடையாளங்களை அறிந்துள்ளனர். இந்து என அறிந்தபின் ஒவ்வொருவராகச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இவ்வாறு 28 பேரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.இதையடுத்துப் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொல்லப்பட்டோர் உடன் வந்த பெண்கள் தங்கள் துணையை இழந்த துக்கத்தில் அருகில் இருந்து அழுது புலம்பியுள்ளனர்.
ஆடைகளைக் கழற்றச் சொல்லி எந்த மதம் எனத் தெரிந்துகொண்டு மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் வன்முறை நிகழ்த்தியுள்ளது நாட்டையே பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

