
ஒரு நடிகரின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவரைக் கூறலாம்.
அதே போலக் கடின உழைப்பை போட்டுத் தொடர் முயற்சிகளைச் செய்தால் ஒரு நாள் நிச்சயம் வாய்ப்புகள் அணிவகுக்கும் என்பது நாம் இவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அவர் தான் நடிகர் யோகி பாபு. ஆம், ஒரு நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது சிறந்த குணச்சித்திர நடிகராக உருமாறி மிகவும் பிஸியாக நடித்துக் கலக்கி வருகிறார்.
வருடா வருடம் எண்ண முடியாத அளவுக்கு இவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை உள்ளது. அந்த அளவுக்கு இவரின் கால் ஷீட் நிரம்பி உள்ளது. அது இரண்டு மூன்று வருடங்களுக்குப் பல தயாரிப்பாளர்கள் இவரைப் புக் செய்து தங்கள் கம்பெனி படங்களில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
அதே போல எல்லா சூப்பர் ஸ்டார் நடிகர்கள் முதல் வளரும் நாயகர்கள்வரை தேர்வு செய்யும் நடிகர் யார் என்றால் அது யோகி பாபுவை கூறலாம். அந்த அளவுக்குத் தயாரிப்பாளர் மன ஓட்டத்தைப் புரிந்து சம்பளத்தில் சமரசம் செய்து நடித்துக் கொடுத்துப் பலரை வாழ வைத்து வருகிறார் இவர்.
இந்த 2023 ஆம் ஆண்டு சுமார் மூன்று முக்கிய சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்ததன் மூலம் இவருக்குத் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த வருடம் வெளியான மூன்று பான் இந்தியா படங்கள் தான் எனலாம். ஆம், அவை வாரிசு, ஜெயிலர், ஜவான். இந்தப் படங்களின் ரீச் இவருக்குத் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பை அள்ளிக் கொடுத்து உள்ளது.
அதோடு, இவருக்குத் தமிழில் வழங்குவதை விட மூன்று மடங்கு சம்பளம் அதாவது சுமார் 10 கோடிகள்வரை கொடுக்கத் தயாரிப்பாளர் முன் வந்து உள்ளாராம். ஆம், இதில் ஹீரோ பிரபாஸ் தானாம். பிரபல இயக்குனர் மாருதி தான் படத்தின் இயக்குனர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இது தான் அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
மேலும், இந்தத் தெலுங்கு படம் மட்டுமின்றி பல தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் இவரின் தேதி கேட்டு எவ்வளவு தொகை கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளார்களாம். இதனால் அடுத்த பல வருடங்களுக்கு யோகி பாபு காட்டில் மழை எனலாம்.

