Yamuna Nagar: கள்ளச்சாராயத்தால் பறிபோன 6 உயிர்!

Advertisements

அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் பறிபோன 6 உயிர்!

கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களை சேகரித்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பரிதாபாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம்தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்ததாக எங்களுக்கு வந்த தகவலின்பேரில் எங்கள் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம், விவரத்தை கேட்டு அறிந்தோம்.கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களை சேகரித்துள்ளோம்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது 308, 302, 120-B போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வீடுகளில் காலியான மது பாட்டில்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.இறந்தவர்களில் ஒருவரான சுரேஷ் குமாரின் மனைவி சம்பா தேவி கூறும்போது, ‘எனது கணவர் எங்கிருந்து சாராயத்தை வாங்கினார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கள்ளச்சாராயத்தால் 6 பேர் இறந்துள்ளனர். அதனால் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *