
தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கினார்.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா, அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது, மரியா கொரினாவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மரியா கொரினா மச்சாடோ பேசியபோது, டிரம்பிற்கு தனது பரிசை வழங்கியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்தது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார். அவர் பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி என்றும் தான் செய்த பணிக்காக மரியா, அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அவரின் அற்புதமான செயலுக்கு அதிபர் டிரம்ப் நன்றியைத் தெரிவித்தார்.



