
புதுச்சேரியில் அரசு அனுமதி பெறாமல் நான்காண்டுக் காலம் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்ததில் மிகப்பெரிய அரசியல் கூட்டுச் சதி உள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து ரங்கசாமி விலக என வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2002ஆம் ஆண்டில் தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி இரண்டு ஆண்டுகள் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அரசு அனுமதி பெறாமல் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நான்காண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளதில் மிகப்பெரிய அரசியல் பின்னணி உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் சபாநாயகருக்கு நெருக்கமானவர் என்று குறிப்பிட்ட நாராயணசாமி, இதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து ரங்கசாமி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதில் ஆந்திரம், கேரளம், தெலங்கானம், உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கும் தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாராயணசாமி.



