
நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் வைத்து வீரர்களின் தீர செயலுக்கு மற்றும் வெற்றி தினத்தை முன்னிட்டு Vijay Diwas பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கொண்டாடப்படுகிறது.
1971- ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா சார்பில் 3900 ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், 9,851 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவூட்டும் விதத்தில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்திய ராணுவத்துக்கு கிடைத்த வெற்றியின் நினைவாகவே விஜய் திவாஸ் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க நாளாக கொண்டாடப்படுகிறது.
1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய வீரர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வெற்றியின் விளைவாகத்தான் வங்கதேசம் எனும் தேசம் உருவாக இந்திய ராணுவம் காரணமாக அமைந்தது.
கடந்த 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் செங்கிஸ்கான் எனும் ஆபரேஷனை செயல்படுத்தி இந்தியாவின் 11 ஏர் ஸ்டேஷன்கள் மீது தாக்குதல் நடத்தியது. 13 நாட்கள் நடந்த இந்த போரில் இந்திய ராணுவத்தின் வீரத்தையும்,துணிச்சலையும், தீரத்தையும் எதிர்கொள்ள முடியாமல் டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்தது. ஏறக்குறைய 93 ஆயிரம் படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இந்த நாளை கொண்டாடும் விதமாக பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். விழாவில் தலைமை பாதுகாப்பு அதிகாரி அனில் சவுகான், தலைமை ராணுவ அதிகாரி மனோஜ் பாண்டே, கடற்படை அதிகாரி அட்மிரல் ர். ஹரிகுமார் மறும் விமானப்படை தளபதி மார்ஷல் அமர் பிரீத் சிங் ஆகியோர் பங்கேற்று உயிர்த் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர். மேலும் ராணுவ அணிவகுப்பும் நடைபெற்றது.

