
விஜய் சினிமாவில் தான் ஹீரோ, நிஜத்தில் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார் . சென்னை மதுரவாயலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் போதை விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் மண்டல மகளிர் அணித் தலைவி விமலா தலைமையில் நடைபெற்றது.
இதில் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா உரையாற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பிரியா, “நான்கு ஆண்டுக்காலத் திமுக ஆட்சியில் குடிப் பழக்கத்திற்கு ஆளானோர் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடைபெறுவதாகவும், தீபாவளிக்கு 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இலக்கு வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அது மட்டுமல்லாமல் கள்ளச் சந்தையில் ஏராளமான மது விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
விஜய் சினிமாவில் தான் ஹீரோ, நிஜத்தில் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ராஜேஸ்வரி பிரியா தெரிவித்தார்.
