Advertisements

டோக்கியோ: ஜப்பானில் நடந்த டோரே பான் பசிபிக் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மதோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (29 வயது, 4வது ரேங்க்) மோதிய வெரோனிகா குதெர்மதோவா (26 வயது, 19வது ரேங்க்) 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றினார்.
இப்போட்டி 1 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெரோனிகா வென்ற முதல் பட்டம் இது. அவரது டென்னிஸ் வாழ்க்கையில் 2வது டபுள்யு.டி.ஏ 500 பட்டம்.
Advertisements


