குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தூக்கு தண்டனை வழங்க வேண்டும் – வேல்முருகன்..!

Advertisements
 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வாழ்வுரிமை கட்சியில் உள்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்திலும் உள்கட்சி தேர்தலை விரைவாக முடித்து பொறுப்பாளர்களை நியமிக்கும் நோக்கத்திலும் இக்கூட்டம் நடைபெற உள்ளது மேலும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் சாதி மத வேறுபாடுயின்றி ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் சம உரிமை கொடுத்து பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசியத்தை மீட்டெடுக்க வேண்டும் எனும் அனைவருக்கும் எங்கள் கட்சியில் இடம் உண்டு.
டிவிகே-வை மீட்டெடுப்பு: டி வி கே என்னும் ஆங்கில சுருக்கத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி பல ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. ஆனால் தற்போது தமிழக வெற்றி கழகம் இதே ஆங்கில சுருக்கத்தை பயன்படுத்தி வரும் சூழலில் அதைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது கன்னடத்துக்குரியது. தேர்தல் நெருக்கம் நேரத்தில் டி வி கே என்னும் ஆங்கிலச் சுருக்கத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளோம்.
 தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் பலர் கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர் இது போன்ற தொடர்  குற்றங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களும் வாழ தகுதியற்றவர்கள் என கருதி அவர்களுக்கு உச்சகட்ட தண்டனையாக தூக்கு தண்டனை தர வேண்டும் என சட்டசபையில் தொடர் கோரிக்கை விடுத்து வருகிறேன். அந்தச் சூழலில் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் போலீஸ் என்கவுண்டர்கள் வரவேற்கத்தக்கது. என்கவுண்டர் செய்யப்பட்டதற்காக காவல்துறை சொல்லும் காரணங்கள் நம்பக்கூடியவையாக இல்லாவிட்டாலும் அவர்களால் என்கவுண்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள் இச்சமூதத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
வட மாநிலத்திலிருந்து வேலை தேடி தமிழகத்துக்கு வருபவர்களின் மூலம்தான் அதிக அளவில் போதைப் பொருள்கள் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது ஆகையால் வேலை தேடி தமிழகத்துக்கு வரும் வடமாநிலத்தினரை கண்காணிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். திமுக கூட்டணி: சட்டப்பேரவையில் மற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தை விட எனக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் என்னுடைய கருத்துக்களை முழுமையாக கூற இன்னும் கூடுதலாக நேரம் தேவை என்று தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கும் எனக்கும் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும் தற்போது வரை தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் பலமாக உள்ளது. தமிழகத்தில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு மாற்றாக மாற்று அரசியல்  அமைய வேண்டும். அதில் ஒற்றைக் கருத்துடைடிய பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் என்றார் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *