Vedhika: அசைவம் சாப்பிடுவதில்லை!

Advertisements

நான் அசைவம் சாப்பிடுவதில்லை! வேதிகா…

‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முனி, காளை, சக்கரகட்டி, காவியத்தலைவன், பரதேசி, காஞ்சனா -3 உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் வேதிகா நடித்து வருகிறார். மீண்டும் சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடித்துவரும் வேதிகா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான படங்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடித்த பரதேசி, காவியத்தலைவன், சிவலிங்கா போன்ற படங்களில் எனக்கு முதன்மை கதாபாத்திரம் கிடைத்தது.

தமிழ் சினிமா இப்போது வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் உள்ளதால் மாறுபட்ட வேடங்களில் கதாநாயகிகள் நடித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிறு பட்ஜெட், பெரிய பட்ஜெட் படங்கள் என்பது முக்கியமல்ல. கதைதான் பட்ஜெட்டை முடிவு செய்கிறது. பேட்ட ராப் படத்தில் பிரபுதேவா உடன் மகிழ்ச்சியாக நடித்து வருகிறேன். முனி 3 என்ற பேய் படத்தில் நடித்தேன்.


பேய் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. பேய் படம் பிடிக்கும் ஆனால் பேயைக் கண்டு ரொம்ப பயப்படுவேன். நான் விலங்குகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை. பால் கூடக் குடிப்பதில்லை. காரணம் என்னவென்றால் கன்றுக் குட்டி குடிக்க வேண்டிய பாலை திருடி நாம் குடிப்பது போல் உள்ளது. எனவே பால் குடிப்பதில்லை.

தோல் செருப்பு கூட அணிய மாட்டேன். ஓ.டி.டி யில் நல்ல ஆழமான கருத்துள்ள பிடித்தமான கதைகள் வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *