
18 மணி நேரம் அமர்ந்து பணி செய்வதால் முதுகில் இரும்பு ராடை வைத்தது போல் வலியால் அவதிப்படுகிறேன் என குடியாத்தத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் விசிக மூத்த நிர்வாகி செல்ல பாண்டியனின் துணைவியார் பாரதியின் உருவப்படத் திறப்பு விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று உருவப்படத்தை திறந்து வைத்தார்.இதில் திமுக எம்எல்ஏக்கள் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார்,குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன்,நகராட்சி தலைவர் சௌந்தராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.பின்னர் உருவபடத்தினை திறந்து வைத்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து பேசிய திருமாவளவன்,கட்சி பதவிக்கு 22 ஆயிரம் பேர் மனு செய்து இருக்கிறார்கள். இதில் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளராக 234 மாவட்ட செயலாளர்களை நியமிக்க போகிறேன்.ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரு மண்டல செயலாளர் மற்றும் மூன்று துணை மண்டல செயலாளர்களையும் நியமிக்க போகிறேன்.அதை நானே மனுக்களை ஆய்வு செய்து தேர்வு செய்து கொண்டுள்ளேன்.இதனால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கம்ப்யூட்டரில் ஸ்கிரீனை பார்த்து வருவதால் எனது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கண்ணில் கட்டி வந்து அவதிப்படுகிறேன்.மேலும் 18 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிகளை கவனிப்பதால் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன்.இரும்பு ராடை முதுகில் வைத்தது போல் கடுமையாக வலி உள்ளதாகவும் கடும் முதுகு வழியால் அவதிப்பட்டு வருவதாகவும் இதனால் முட்டி வலி மற்றும் கால்களிலும் வீக்கம் அதிகரித்துள்ளதாகவும் உட்கட்டமைப்பை நாம் பலப்படுத்தினால் தான் அதிகாரத்திற்குச் செல்ல முடியும் என விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.




