US Recognises Arunachal Pradesh As Indian Territory: அருணாச்சல பிரதேசம் இந்திய பகுதிதான்…அமெரிக்கா அங்கீகரிப்பு!

Advertisements

இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.அருணாச்சல பிரதேசம் திபெத்தின் தெற்குப் பகுதி என சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் எங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வருகிறது. இந்திய தலைவர்கள் அருணாச்சால பிரதேசம் சென்றால் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இந்தியாவால் அருணாச்ச பிரதேசம் என அழைக்குப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். ஜிஜாங்கின் (திபெத்தை சீனா இவ்வாறு அழைக்கிறது. திபெத்தின் தெற்குப்பகுதான் அருணாச்சால பிரதேசம் என சீனா கூறி வருகிறது) தெற்குப் பகுதி சீனாவின் உள்ளார்ந்த பகுதியாகும்” என சீன பாதுகாப்பு அமைச்கத்தின் செய்தி தொடர்பானர் ஜாங் ஜியாவோகாங் தெரிவித்திருந்தார்.

சீனா இவ்வாறு உரிமைகோரிய நிலையில், அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறுகையில் “அருணாச்சல பிரதேசத்தை இந்திய நிலப்பரப்பாக அங்கீகரிக்கிறோம்.

ஊடுருவல் அல்லது அபகரித்தல், ராணுவம் மூலமாக உண்மையான எல்லைக்கோட்டை தாண்டி தங்களது நிலப்பரப்பு என ஒருதலைப்பட்சமாக உரிமைக்கோருவதற்கான எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *