
உக்ரைன் – ரஷ்யா அமைதித் திட்டம் குறித்து புளோரிடாவில் அமெரிக்க – உக்ரைன் தலைவர்கள் இன்று மீண்டும் பேச்சு நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாண்டுகளாக நீடிக்கும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயன்று வருகிறார். அவர் உருவாக்கிய அமைதித் திட்டம் குறித்து புளோரிடாவிலும், ஜெனீவாவிலும் உக்ரைன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது.
இந்தையடுத்து மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபரின் தூதர் ஸ்டீவ் விட்காப், டிரம்பின் மருமகன் ஜார்டு குஷ்னர் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
பேச்சு பயனுள்ளதாக இருந்ததாகவும், அதேநேரத்தில் அமைதித் திட்டத்தில் உள்ள சில பகுதிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் மியாமியில் இன்று அதிபரின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், உக்ரைன் தேசியப் பாதுகாப்புக் குழுத் தலைவர் ருஸ்தம் உமராவ் ஆகியோர் பேச்சு நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


