
ரஷ்ய ராணுவம் டிரோன்கள், ஏவுகணைகள் ஆகியவற்றால் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் லிவிவ் என்னுமிடத்தில் ரஷ்யாவின் டிரோன்களும் ஏவுகணைகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தில் 15 வயதுச் சிறுமி உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. சபோரிசியா என்னுமிடத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஏவுகணைகளும், 500 டிரோன்களும் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
