
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து அரை நிர்வாணத்துடன் உதவிக்கேட்ட அலையவிட்ட கொடூரன் ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு உடலில் ரத்தம் சொட்ட, அரை நிர்வாணத்துடன் நடந்து சென்ற சிறுமி ஒருவர் ஒவ்வொரு வீடாக உதவி கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவம் நடந்த பகுதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் என்பது தெரிய வந்தது. ஒருவரிடம் உதவி கேட்டுச் சென்றபோது அந்த நபர், உயிருக்குப் போராடும் சிறுமியைக் காப்பாற்றாமல் சிறுமியை வீடியோ எடுத்துள்ளார்.
15 கிலோ மீட்டர் தூரத்திற்கு உதவி கேட்டுச் சென்ற சிறுமியைப் பார்த்த ஆசிரமத்தின் பாதிரியார் ஒருவர், சிறுமிக்கு முதலுதவி செய்ததுடன் உடனடியாகப் போலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாதான மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே சிறுமியிடன் கொடூரமாக நடந்த குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது ஆட்டோர் ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகப் பேசியுள்ள விசாரணை அதிகாரி எஸ்பி, ரத்த கரைகள் குற்றம்சாட்டப்பட்டவரின் ஆட்டோவில் இருப்பதாகவும், அவரைப் பிடிக்கச் சென்றபோது தப்பி ஓட முயன்றதில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆட்டோர் ஓட்டுநரிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பாதிக்கபப்ட்ட சிறுமி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவரைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்துள்ளது.




