
Twitter | Boat | Crocodile
தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பதை காண முடிகிறது. அந்த ஆற்றில் மோட்டார் பொருத்திய படகு ஒன்று முதலைகளின் நடுவே வேகமாகச் செல்வதையும் காண முடிகிறது….
சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான புதுப்புது வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும். சில வீடியோக்கள் ஆபத்தானதாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.
அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் இருப்பதை காண முடிகிறது. அந்த ஆற்றில் மோட்டார் பொருத்திய படகு ஒன்று முதலைகளின் நடுவே வேகமாகச் செல்வதையும் காண முடிகிறது.
பார்ப்பதற்கு திகிலை ஏற்படுத்தும் இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 39 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர்.


