அனல் பறந்த வாதங்கள்..!முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.!

Advertisements

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி நடத்திய பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததில் காவல்துறைக்கு உள்நோக்கம் உள்ளது. எஃப்.ஐ.ஆர்.-ல் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் என்ன அறிவுரை என்று கூறவில்லை. காவல்துறையால் புனையப்பட்ட வழக்கு இது. நடந்த சம்பவத்தில் மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது.

கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துள்ளனர். காவல்துறை ஏன் தடியடி நடத்தியது? இது கூட்டத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக அளவில் மக்கள் கூடும் பகுதி, குறுகிய சாலை என்பதாலும், மக்கள் வெளியேற முடியாத இடம் என்பதாலும் காவல்துறை அனுமதியை மறுத்திருக்க வேண்டும்.

கூட்டம் ஒழுங்குபடுத்துவது போலீஸ் கடமை. தொண்டர்கள் ஒழுங்காக நின்றிருந்தார்கள். அப்போது கூட்டத்திலிருந்து செருப்பு வீசப்பட்டது. உடனே போலீஸ் தடியடி நடத்தினார்கள். எதற்காக? மொத்த குழப்பத்திற்கு காரணம் போலீஸ். எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. உள்நோக்கத்துடன் உயிரிழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

ஒரு பொதுச் செயலாளர் அவர்களது தொண்டர்களை கொலை செய்ய முயல்வாரா?எங்கள் தலைவர் நான்கு மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். மூன்று முதல் பத்து மணி வரை அனுமதி பெற்றுள்ளனர். எனவே ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மதியழகன் தவறு செய்யவில்லை. காவல்துறை மற்றும் அரசுதான் தவறு செய்துள்ளது.

இதனை அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர், “சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் அவரது வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும். எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என ஆனந்த் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மதியழகன் உட்பட இரு மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை துவக்க நிலையில் இருக்கிறது. எனவே யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், மதியழகன் மற்றும் என். ஆனந்த் ஆகிய இருவர்தான் இந்த முழு கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட அனைத்து ஆதாரங்களும் சமூக வலைதளங்களில் உள்ளது.

முன் ஜாமீன் கோரிய இருவருக்கும் இந்தக் கூட்ட நெரிசலில் பங்கு இருக்கிறது. இதற்கு த.வெ.க.தான் பொறுப்பு. எந்தக் கூட்டத்திலும், கூட்டத்தை கட்டுப்படுத்த நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி ஜோதிராமன், “இந்தக் கூட்டத்தில் சிறு குழந்தைகள், மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் எப்படி அவர்களை அனுமதித்தனர்?”

அரசு தரப்பில், “கூட்டத்திற்கு ஒரு குடிநீர் பாட்டில் கூட என். ஆனந்த் ஏற்பாடு செய்து தரவில்லை. தொண்டர்களை பாதுகாக்காமல் நிர்வாகிகள் அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். வேறு எந்தக் கூட்டத்திலாவது நிர்வாகிகள் தப்பிப்பார்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நீதிபதி, “சம்பவம் நடப்பதற்கு முன்பாக காவல்துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்புகள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *