
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காரணமாகக் குறித்த நேரத்தில் பணிகளைச் செய்து முடிக்க இயலாது. மேலும், பணியில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். தேவையற்ற செலவுகள் காணப்படும். தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். அதிக செலவுகள் ஏற்படலாம். இதனால், கடன் வாங்கவும் நேரிடும். ஆரோக்கியத்தில் தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் பணியில் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மனம் திறந்து பேசினால் நல்ல புரிந்துணர்வு உண்டாகும். நிதிநிலைமை அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. அதிகமாகச் சிந்தனை செய்வதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் இருப்பதால் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் கோபத்துடன் பேசுவீர்கள்.தேவையற்ற செலவுகள் ஏற்படும். மேலும், கவன குறைவு காரணமாகப் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.நீங்கள் எதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக இருக்கும். இதனால் பணியில் தவறுகள் நேரலாம். துணையுடன் கசப்பான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பண இழப்பும் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், பணியிடத்தில் சக பணியாளர்களுடன் சகஜமாகப் பழக வேண்டும். துணையுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கிறது.நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் திறமைகள் அங்கீகாரம் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும்., நிதிநிலை சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நாளை, நீங்கள் எதையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். பணியிடத்தில் பணிகளை முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடும் விவாதங்களும் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கிறது. ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனையால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. துணையுடன் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நெருங்கிய நபருக்காகச் செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். மேலும், ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. துணையுடன் விசேஷத்திற்கு சென்று மகிழ்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

