Today Rasi Palan – இன்றைய ராசிபலன் – 03.09.2024

Advertisements

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 18ம்- தேதி செவ்வாய்க்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.50 வரை மகம் பின்பு பூரம்

திதி : இன்று காலை 07.59 வரை அமாவாசை பின்பு பிரதமை

யோகம் : சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை : 4.45 – 5.45

ராகு காலம் மாலை : 03.00 – 04.30

எமகண்டம் காலை : 09.00 – 10.30

குளிகை மாலை : 12.00 – 1.30

கௌரி நல்ல நேரம் காலை : 01.45 – 02.45

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 – 8.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : உத்திராடம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

வெளிநாடுகளில் குடிபுக ஆசைபடுபவர்களுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். கல்வியில் வெற்றி உண்டு. உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்

வழக்கறிஞர்கள், கவுன்சிலிங் செய்பவர்களுக்கு வாக்குத் தொழிலால் லாபம் வந்தடையும். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச வேண்டாம்.

அதிர்ஷட நிறம் : சிவப்பு

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பல் வலி, மூட்டு வலி வந்துபோகும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கடகம்

வெளியூர் பயணம் நேரிடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் மகிழ்ச்சியும் உண்டு. கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் மின்னும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

துலாம்

வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். காதல் கண் சிமிட்டும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்

தொழிலில் அலட்சியபோக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடு. விட்டுக் கொடுப்பது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். பணப் புழக்கம் மிகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அதிர்ஷட நிறம் : நீலம்

தனுசு

அலைச்சல் அதிகரிக்கும். பொது சேவையில் உள்ளவர்களான அரசியல்வாதிகளுக்கு தங்கள் செல்வாக்கு உயரும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பேச்சில் கவனம் தேவை. திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகரம்

உத்திராடம் நட்சத்திரகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கவேண்டாம். வாக்குவாதமும் செய்ய வேண்டாம். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் பொறுமை அவசியம். காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். லாபத்தை அதிகரிப்பர். தம்பதிகளிடையே விட்டுக் கொடுப்பர். புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். பழைய வீட்டை சீர் செய்வீர்கள். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மீனம்

மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். கவனம் தேவை. சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாக முடியும். தங்கள் பிள்ளை நன்கு படிப்பர். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *