மேஷ ராசிக்காரர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும் நாளாக இருக்கிறது. நீங்கள் எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாகப் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் கடினமாக இருக்கும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் அவதி படுவீர்கள். உங்கள் துணையுடன் வீண் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவிற்கு சாதகமான நாள் அல்ல. ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு செயல்களையும் கவனமாகச் செய்ய வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். இதனால் பதட்டம் அடைவீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.மேலும் , தாயின் உடல் ஆரோக்கியத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். இதனால், பணியில் வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். போதுமான அளவில் பணப்புழக்கம் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருப்பது அவசியம். துணையிடம் அதிருப்தியான சூழ்நிலை காணப்படும். அதிக செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. ஆன்மீக ஈடுபாடுகளில் கலந்து கொள்வதன், மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில், இதனால், பணிகளைப் பணிகளைச் செய்து முடிப்பதில் சில தடைகள் காணப்படும். இதனால், பணிகளைத் திட்டமிட்டு செய்வது அவசியம். தவறான புரிந்துணர்வின் காரணமாகத் துணையிடம் வீண் வாக்குவாதம் உண்டாகும். கூடுதல் செலவினங்கள் காணப்படும். மேலும், கூடப் பிறந்தவர்க்ளின் ஆரோக்கியத்திற்கு செலவு செய்ய நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு, முதுகு வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்குசிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். பணிகளைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கிறது. பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். துணையிடம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பயனுள்ள விஷயங்களுக்குப் பணத்தை செலவு செய்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்கள் காணப்படும் நாளாக இருக்கிறது. ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டு இருப்பீர்கள். பணியிடத்தில் பணிகள் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருப்பது அவசியம். துணையுடன் வாக்குவாதம் உண்டாகும். பண வரவு மிதமாகக் காணப்படும். இதனால் சேமிப்பது கடினம். ஆரோக்கியத்தில் கண்களில் பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. உங்கள் செயல்களில் கவனமாய் இருக்க வேண்டும். மேலும், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். துணையிடம் பொறுமை இழந்து பேசுவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மறக்கமுடியாத தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் முயற்சியினால் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளை சிறப்பாக முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.