Advertisements

மேஷம்

உங்களின் சமயோசித புத்தி மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் சாத்தியம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.இன்று நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்கள் செயல் திறன் அசர வைக்கும். உங்கள் முயற்சிக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். குடும்ப பிரச்சினைகளைக் கலந்தாலோசித்து சுமூகமான தீர்வு காணுவீர்கள்.பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். பூர்வீகசொத்து மூலம் பணவரவு வர வாய்ப்புள்ளது.உங்கள் நேர்மறை எண்ணம் மற்றும் மனஉறுதி காரணமாக இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
ரிஷபம்

இன்று அவநம்பிக்கையும் அமைதியின்மையும் காணப்படும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம்இன்று அதிகப் பணிகள் காணப்படும். பணியில் நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. எனவே புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும். உங்கள் சக பணியாளர்களிடம் உரையாடும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் சகஜமாக நடந்து கொண்டு நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள்.நிதி வளர்ச்சி இன்று ஏமாற்றத்தை அளிக்கும். செலவுகள் அதிகமாகக்காணப்படும். தைரியமின்மை காரணமாக இன்று அசௌகரியமாக உணர்வீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மிதுனம்

இன்று மிதமான பலன்களே காணப்படும். இன்று செயல்கள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். சில பணிகள் நிலுவையில் நிற்கும். இன்றைய சவால்களைச் சந்திக்க சமநிலை போக்குத் தேவை.குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. இது உங்களுக்குக் கவலையை அளிக்கும். நீங்கள் வருத்தமான மனநிலையில் இருப்பீர்கள்.குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு எழும். இதனால் முரண்பாடு எழும். இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்வதன் மூலம் தீர்வு காணலாம்.இன்று வரவுச் செலவு இரண்டும் இணைந்து காணப்படும். சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்பு குறைவு.உங்கள் தாயாருக்கு சிறிய உடல் நலக் கோளாறு காணப்படும். அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.
கடகம்

இன்று இனிமையான நாள். உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் செயல்களை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்டமான நாள்.உங்கள் செயல்திறனுக்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் பணிகளைச் சிறந்த தரத்துடன் முடித்துத் தருவீர்கள். உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு தக்க வைத்துக் கொள்ள முடியும்.இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். உங்கள் வங்கியிருப்பு உயரும். நீங்கள் இன்று புதிய முதலீடுகளைச் செய்யலாம். அது லாபகரமாக இருக்கும்.உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் மன உறுதி காரணமாக இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
சிம்மம்

இன்று துடிப்பான நாளாக இருக்காது. இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். கவனம் மற்றும் சிறப்பான திட்டம் நல்ல பலன் தரும்.நீங்கள் உங்கள் துணையுடன் விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். இது நிலையான உறவிற்கு நல்லதல்ல. எந்த விஷயத்தையும் லேசாகச் சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.பணப்புழக்கம் போதிய அளவில் காணப்படாது. இன்று கணிசமான தொகை சம்பாதிக்கும் வாய்ப்பும் குறைவு.தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் யோகா மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் ஏற்படும்.
கன்னி

இன்று சுமூகமான பலன்கள் கிட்டாது.உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டும். இன்று அதிர்ஷ்டம் காணப்படாது.உங்கள் சக பணியாளர்களின் வளர்ச்சி காரணமாக நீங்கள் பாதுகாப்பற்ற தன்மை உணர்வீர்கள். அவர்கள் பணியில் முன் நிலையில் இருப்பார்கள். இது உங்களுக்குக் கவலையை உண்டாக்கும்.உங்கள் துணையிடம் பேசும்போது வன்மையாக நடந்து கொள்வீர்கள். பதட்டமில்லாத நல்லுறவை ஏற்படுத்த இதனைத் தவிர்த்தல் வேண்டும்.இன்று நிதிநிலையில் ஏற்ற இறக்கம் காணப்படாது.பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். உயரழுத்த வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
துலாம்

இன்று சகஜமாகவும் நகைச்சுவை போக்கும் மேற்கொண்டால் நன்மை ஏற்படும். பிரச்சினைகளைச் சமாளிக்க இயலும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.முறையாகத் திட்டமிட்டால் பணிகளைச் சிறப்பாக ஆற்றலாம். அதன் மூலம் வெற்றி காணலாம்.உங்கள் துணையுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கவனமற்ற வார்த்தைகளைப் பேச வாய்ப்புள்ளது. இது உறவில் மகிழ்ச்சியைக் கெடுக்கும்.உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கண் மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
கண் மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
விருச்சிகம்

இன்று வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமான நாள்.குறைந்த முயற்சியில் அதிக வெற்றி பெறுவீர்கள். இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். இதனால் நன்மை ஏற்படும்.இன்று முக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்வதில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொல்வீர்கள். இது உங்கள் சகபணியாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள். இது அவரை மகிழ்விக்கும். எனவே பொதுவாக இருவரிடமும் மகிழ்ச்சி காணப்படும்.இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.நீங்கள் ஸ்திரமான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். தேக ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
தனுசு

இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் இன்று லாபகரமாக இருக்கும்.பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளைக் குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் பணிகளை ஒழுங்காக உற்சாகத்துடன் முடிப்பீர்கள்.உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதன் மூலம் அவர் உங்கள் உறவின் மதிப்பை உணரலாம்.இன்று போதிய அளவு நிதி காணப்படும். உங்கள் பணத் தேவைகள் இன்று பூர்த்தியடைய அது உதவும். நீங்கள் அதிக அளவில் பணம் சேமிப்பீர்கள்.உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

இன்றைய நாள் சிறந்த பலன் தரச் சாதகமாக அமையாது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பரபரப்பான பணிச்சூழல் காணப்படும். ஓய்வெடுக்க நேரம் காணாது. இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.கருத்து வேறுபாடு காரணமாக நீங்கள் உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிக்கத் தவறுவீர்கள்.எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது சிறந்தது. இன்று உங்கள் வங்கியில் கணிசமான தொகை பராமரிக்க இயலாது. செலவுகள் காரணமாகக் கையிருப்பு பணம் கரையும்.இன்று அமைதியின்றி காணப்படுவீர்கள். இதனால் பதட்டம் ஏற்பட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கும்பம்

இன்று அனுகூலமான நாளாக இருக்காது சில சமயங்களில் நீங்கள் பொறுமையின்றி காணப்படுவீர்கள். நீங்கள் தைரியம் இழக்கும் வகையில் கடினமான சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் திட்டமிட்டு மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.நீங்கள் அற்ப விஷயங்களைக் கூடப் பெரிதாக்குவீர்கள். இது உங்கள் உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். இன்று செரிமானம் சம்பந்தமாகப் பிரச்சினை காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்

இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும்.பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களிடம் காணப்படும் நம்பிக்கை காரணமாக நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள்.உங்கள் துணையுடன் அன்பான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். இது உங்களிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட உதவும்.இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். இதனால் உங்களிடம் திருப்தி காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் நம்பிக்கை உணர்வு காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

