TNSTC: நவம்பர் 19ஆம் தேதி எழுத்துத் தேர்வு!

Advertisements

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களில் நவம்பர் 19 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்வுக்கான அனுமதிச் சீட்டை நவம்பர் 13 ஆம் தேதி முதல் http://www.arasubus.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதிச் சீட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்ததும், 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *