Thirukoilure Suicide: சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல்!

Advertisements

திருக்கோவிலூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் சாலையில் உடலை வைத்து  உறவினர்கள் மறியல் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஜி, அரியூர்  கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மகன் ஆனந்த் (32) இவர் அருகில் உள்ள அம்மன் கொள்ளை மேடு  பகுதியில்  டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் யாரோ ஒருவர் பால் விற்பனை தொடர்பாக இவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ஆனந்த் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திருச்சி சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்துச் சாலை  மறியலில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனந்த் தற்கொலைக்குக் காரணமான நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்தச் சாலை மறியலால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *