நினைவுச் சின்னமான செக்கோஸ்லோவாக்கியன் லிடிஸ் கிராமம்!
தெற்கு-மத்திய பிரான்ஸ். இது Limoges க்கு வடமேற்கே 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Oradour-sur-Glane இரண்டாம் உலகப் போரின்போது குறிப்பாகக் கொடூரமான அட்டூழியத்தின் தளமாகும். ஜூன் 10, 1944 அன்று செக்கோஸ்லோவாக்கியன் லிடிஸ் எனும் முழு கிராமமும் அழிக்கப்பட்டது மற்றும் அதன் குடிமக்கள் ஜெர்மன் துருப்புக்களால் கொல்லப்பட்டனர்.
நீ அடிச்சா நானும் திருப்பி அடிப்பேன் எனும் பாணியில் எதிர்ப்புத் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், 200 பேர் கொண்ட ஒரு SS பிரிவினர் 652 குடிமக்களையும் அவர்களது வீடுகளிலிருந்து கிராமச் சதுக்கத்திற்குள் விரட்டினர்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களைத் தேடியும், தாக்கியவர்களின் அடையாளங்களும் சரி பார்க்கப்பட்டது. அதே சமயம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.ஆண்கள் கொட்டகைகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளும் தேவாலயத்தின் உள்ளேயும் தங்க வைக்கப்பட்டனர். துருப்புக்களைக்கொண்டுகொட்டகைகள் மற்றும் தேவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
மேலும் டைனமைட் மற்றும் தீக்குளிக்கும் சாதனங்களைக் கொண்டு அவர்கள் முழு கிராமத்திற்கும் தீ வைத்தனர்.தீயில் கருகி இறக்காதவர்கள், இயந்திரத் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளை வீசிக் கொல்லப்பட்டனர், 10 பேர் தவிர, எப்படியோ தீயிலிருந்து தப்பித்து, SS புறப்படும் வரை மரணம்போல் நடித்தனர்.

தீயில் கருகி இறந்தவர்களின் எண்ணிக்கை 642 தேவாலயத்தில் 245 பெண்கள் மற்றும் 207 குழந்தைகள் மற்றும் கொட்டகைகளில் 190 ஆண்கள்.இந்தக் கொடூரத்தைச் செய்த SS ஆட்கள் சுலபமாகத் தப்பித்தனர். பல முய்ற்சிகளுக்குப்ப் பிறகு இறுதியாக, 1953 இல், 200 SS ஆட்களில் 21 பேர் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டனர். ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள்; அவர்களில் ஐந்து பேர் சிறை தண்டனை பெற்றனர், மேலும் இருவர் தூக்கிலிடப்பட்டனர்.
அந்தக் கிராமம் இன்று வரை பாழடைந்தே காணப்படுவது தான் சோகமான நிகழ்வாகும். அக்கிராமமே கைவிடப்பட்ட கிராமம்போல் புனரமைக்கப்படாமல் விடப்பட்டது; அதன் இடிபாடுகள்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் விளங்குகின்றன.


