
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 54 ஆவது மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. இதில், மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரினா சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனை அடுத்து, அரையிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் விளையாட உள்ளார்.




