
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் , அந்தந்த அரசியல் கட்சிகளின் பிரச்சார பணிகள் , கட்சி பணிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் , தமிழக வெற்றி கழகத்தினர் , ஈரோட்டில் வரும் 16ஆம் தேதி விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் செங்கோட்டையன் மனு அளித்திருந்தார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கிடைத்தவுடன் உரிய முறையில் அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்று கூறினார்.
மேலும் விஜயின் ரோட் ஷோ தற்போதைய சூழலுக்கு தவிர்க்கப்படுவதாகவும், ஈரோட்டில் தனியார் இடத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
.ஈரோடு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் யாராவது தவெகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதிலளித்தார்.




