தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏவிய அஸ்திரம், ஜோசப் விஜய்யை காங்கிரசே கழட்டிவிடும் நிலைக்குத் தள்ளி இருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே மசோதா கொண்டு வரப்பட்டபோது இண்டியா கூட்டணியின் தமிழ்நாடு தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதனை எதிர்த்தார். கருப்புச் சட்டம் எனக்கூறி கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதன் நகலையும் எரித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியதால்,இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறிய மு.க.ஸ்டாலின், தற்போது இந்த மசோதாவுக்கு ஆதரவளித்திருப்பது இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற தற்போதைய நிலவரப்படி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 320 எம்.பி.க்கள் உள்ள நிலையில், திமுகவின் 22 எம்.பிக்கள், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசின் 8 எம்.பிக்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 4 எம்.பி.க்களும் சேரும்போது எண்ணிக்கை 354 ஆக உயர்கிறது.
வாக்கெடுப்பின்போது சில உறுப்பினர்கள் அவைக்கு வராவிட்டால், தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், இந்த மசோதா நிறைவேறலாம் எனக் கூறப்படுகிறது.
வாக்கெடுப்பின்போது சில உறுப்பினர்கள் அவைக்கு வராவிட்டால், தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், இந்த மசோதா நிறைவேறலாம் எனக் கூறப்படுகிறது.
எனவே மசோதா நிறைவேறாமல் தடுக்கப் போராடிவரும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், திமுக ஆதரவு கொடுக்ககூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகின்றனர்.சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, மிசா பார்தி, எம். ஏ.பேபி,ஹேமந்த் சோரன், வி.டி.சதீஷன், டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி என இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் 4 மாநில முதலமைச்சர்கள் என 12 பேர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழங்கும் ஆதரவை கைவிட்டால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதில்லை என மு.க.ஸ்டாலின் டீல் பேசலாம் எனக் கூறப்படுகிறது.இன்றைய சூழலில் இண்டியா கூட்டணியின் அகில இந்திய தலைமையான காங்கிரஸ் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டிருப்பதால், நிச்சயமாக விஜய்யை காங்கிரஸ் கை கழுவும் என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதாகக் கூறி தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் கம்யூனிஸ்டுகளும் கூட, அகில இந்திய தலைமைக்கு கட்டுப்பட்டு, தவெக ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்கக் கூடும் என்கிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் வெளியேறினால் விசிகவும், அதே நிலைப்பாட்டை எடுக்குமென்பதே திண்ணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் வெளியேறினால் விசிகவும், அதே நிலைப்பாட்டை எடுக்குமென்பதே திண்ணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
எனவே திமுக தலைவர் ஸ்டாலின் உடனான இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களின் சந்திப்பு என்பது தவெக ஆட்சி கலைப்புக்கே அடிகோலும் என அரசியல் அரங்கத்தில் அலையட்டிக்கிறது.

