
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை கூடியது.
கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகமது கனி, ஜெயராமன், தங்கவேல்ராஜ், கணேசன், ரமேஷ், சண்முகம், சுந்தரம், புருஷோத்தமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன், தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி செல்வம், சம்பந்தன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதன் பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மறைந்த மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
