Suyambulingaswamy Temple: வானவேடிக்கையுடன் கோபுர உத்திரம் அமைக்கும் பணி துவக்கம்!  

Advertisements

உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில்  உத்திரம் அமைக்கும் பணி நடந்தது.

திசையன்விளை: தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

இக்கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலைகொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.கோபுர நிலையில் 108 சிவதாண்டவத்தை நினைவுகூறும் வகையில், கோபுர நிலைகளில் 108 சிவதாண்டவ சிற்பங்கள் அழகிய கலை வேலைப் பாடுகளுடன் அமைக் கப்பட்டுள்ளது.

ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது. முன்னதாக கோ பூஜை நடந்தது.பின்பு கோபுர உத்தி ரத்திற்கு மாலை அணி வித்து மலர்தூவி பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு 12 டன் எடை கொண்ட 10 கருங்கல் உத்திரங்களை கிரேன் மூலம் நிறுவும் பணி வானவேடிக்கை முழங்க நடந்தது.

விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன், பேராசிரியை நிர்மலா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், துணைத்தலைவர் கனக லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, ராஜ கோபுரகமிட்டி உறுப்பினர் ராஜாமணி, தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், ஆடிட்டர் ஜீவரத்தினம், ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்திருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *