
ஓமலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். இம்முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு, மகளிர் என அனைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் மாற்றுத்திறன் சக்தியை கண்டறிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கிராமப்புறங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.



