
த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, நாடாளுமன்ற உறுப்பினர் திருமாளவன் சந்தித்தார். அப்போது, அவர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் கொடுத்தார். இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் திருமாளவன் செய்தியாளர்களிடம் பேசியப் போது, த.வெ.க. தலைவர் விஜய்க்கு, துாய சக்தி, தீய சக்தி என, அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கின்றனர் என்றும், அதை மக்கள் தான் முடிவு செய்வர் என்றும் தெரிவித்தார்.


