
கன்னியாகுமரி: நெல்லை மாவட்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள் முத்துராஜா – ஜோதிகா தம்பதியினர்.
இவர்கள் நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்திற்கு வெளியே ஊசி, பாசி மணி விற்பனை செய்து இரவு அப்பகுதியிலேயே படுத்து உறங்கியுள்ளனர். கடந்த 23ம் தேதி இரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் வந்த பெண் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியை எழுப்ப முற்பட்டபோது அவர்கள் எழும்பாததால் அருகில் உறங்கி கொண்டிருந்த குழந்தை கடத்தி சென்றுள்ளார்.
இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை கடத்தி சென்ற பெண் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் நடத்தி வருகின்றனர்.

