
48 வயதில் இடுப்பழகைக் காட்டி ரசிகர்களைச் சுண்டியிழுக்கும் ஷில்பா ஷெட்டி…
மும்பையில் நடைபெற்ற பேஷன் விருது நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி படு கவர்ச்சியான உடையில் கலந்துகொண்டு கவனத்தை ஈர்த்தார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த ஷில்பா ஷெட்டி, கடந்த 1996-ம் ஆண்டு தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் ரோமியோ படம்மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்தார் ஷில்பா ஷெட்டி.

தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் குஷி. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படத்தில் மேக்கரினோ என்கிற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடி இருந்தார். அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. அதன்பின்னர் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட்டிலேயே ஐக்கியம் ஆனார்.

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கடந்த 2009-ம் ஆண்டுத் திருமணம் நடைபெற்றது. இவர் ராஜ்குந்த்ரா என்கிற தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

சினிமாவை போல் பல்வேறு தொழில்களையும் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. இவர் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல் என்கிற அணியின் உரிமையாளராக இருந்தார். 2009-2015-ம் ஆண்டுவரை அந்த அணியின் ஓனராக இருந்த ஷில்பா பின்னர் அதனை விற்றுவிட்டார்.

தற்போது 48 வயதாகும் ஷில்பா ஷெட்டி, இந்த வயதிலும் இளமை குறையாமல் அழகை பராமரித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் விருது விழாவில் இடுப்பழகை முழுசாகக் காட்டியபடி வந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதென்ன நாகினி டிரெஸ் மாதிரி இருக்கு எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.48 வயதிலும் ஷில்பா ஷெட்டி இடுப்பழகைக் காட்டி ரசிகர்களைச் சுண்டியிழுத்துவருகிறார்.



