Shah Rukh Khan: இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த நடிகை!

‘ஜவான்’ பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட, தீபிகா படுகோன்… ஷாருக்கானுடன் ரொமான்டிக்காக முத்தம் கொடுப்பது போல் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது…

பாலிவுட் பாட்ஷா, ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி, வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்தப் படத்தை இயக்குனர் கோலிவுட் பட இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார்.

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பதான்’ இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதுடன், 1000 கோடி வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. எனவே ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.

சமீபத்தில் வெளியான இந்தப் படம், இதுவரை சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றிவிழா நேற்று மும்பையில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் இப்படத்தில் நீடிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனும் கலந்து கொண்டார்.

வெள்ளை நிற சேலையில் அழகு தேவதைபோல் கலந்து கொண்ட இவர், இந்த நிகழ்ச்சியின்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக ஷாருக்கானுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இதைப் பார்த்து ரசிகர்கள்… படத்தின் தான் ரொமான்ஸ் என்றால் இது போன்ற நிகழ்ச்சிகளிலும் உங்கள் ரொமான்ஸ் கொஞ்சம் ஓவராக இருக்கிறதேயெனக் கமெண்ட் போட்டுத் தெறிக்கவிட்டு வருகிறார்கள். இந்தப் புகைப்படமும் தற்போது வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *