Salem Periyar University Vice – Chancellor: துணைவேந்தர் கைது!

Advertisements

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் கடந்த சில நாட்களாக வந்துள்ள நிலையில், தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் வர்த்தக ரீதியான நிறுவனம் தொடங்கியுள்ளதாகப் புகார் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் இன்று பெரியார் பலகலை கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஜெகநாதன் தனது நண்பர்களுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தைத் தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்துள்ளார். இதனை உறுதி செய்யப்பட்டதால் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சிலர் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சனைகள் நிலவி வந்த நிலையில் இன்று துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *