
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டில் கார்த்திகை மாத மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு இருமுடி கட்டி பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.
நாளொன்றுக்கு அதிகபட்சம் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சபரிமலை கோயிலில் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும் நிலையில் அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.




