Roja Played Cricket: கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொடுத்த முதல்வர்!

Advertisements

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொடுத்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி குண்டூரில் ஆடுதம் ஆந்திரா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெகன் மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது அருகில் இருந்த அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை அவர் கிரிக்கெட் விளையாடச் சொன்னபோது, தனக்கு விளையாடத் தெரியாது என்று கூறினார். உடனே அவரை அழைத்துக் கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுத்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா, ‘ஆடுதம் ஆந்திரா’ நிகழ்ச்சியில் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகனுடன் பங்கேற்றார். அதன் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவிடம் கிரிக்கெட் பேட்டை கொடுத்துத் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். கிரிக்கெட் பேட்டை பிடித்திருக்கும் ரோஜா எப்படி பந்தை அடிப்பது என்று தெரியாமல் சிரமப்படுவதை பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி, உடனே பேட்டை எப்படி பிடிப்பது, பந்தை எப்படி எதிர்கொள்வது, கிரீஸில் எப்படி நிற்பது என்று ரோஜாவுக்குக் கற்றுக்கொடுத்தார்.

ஜெகனின் அறிவுறுத்தலின்படி, ரோஜா கிரிக்கெட் விளையாட ரெடியானதும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார். முதலில் பேட்டை எப்படி பிடிப்பது என்றுகூட தெரியாமல் இருந்த ரோஜா இப்படி பந்தை விளாசியதை பார்த்த ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ரோஜாவைப் பாராட்டினர். ஜெகன் மோகன் ரெட்டி நடிகை ரோஜாவுக்குக் கிரிக்கெட் விளையாடச் சொல்லிக்கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *