ramapuram:நாகாத்தம்மன் திருக்கோவில் 38 வது ஆண்டு ஆடித்திருவிழா 9ஆம் தேதி துவக்கம்!

சென்னை: ராமாபுரம் ,திருமலை நகர் 2வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் 38 வது ஆண்டு ஆடித்திருவிழா 9ஆம் தேதி துவங்கி 3நாட்கள் நடைபெற உள்ளது.

வருகின்ற 5 ஆம் தேதி திங்கட்கிழமை காலைக் கணபதி ஹோமம் ,அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பந்த கால் நடு நிகழ்ச்சியுடன் ஆடித்திருவிழா துவங்கி நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து9ஆம்தேதி காலை 8 மணிக்குப் பால் கூட ஊர்வலத்துடன் திருவிழா இனிதே ஆரம்பமாகிறது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து மதியம் சக்தி கரகம் புறப்பாடு, பெண்களுக்கான சுமங்கலி பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் 10ஆம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. மதியம் சக்தி கரகம் புறப்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

ஆடித் திருவிழாவின் இறுதி நாளான 11ஆம் தேதி காலைச் சக்தி கரகம் புறப்பாடு ,கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா, அம்மனுக்கு கும்பன் போடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *