Advertisements

இராமநாதபுரத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு இன்று வருகை தர உள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேராவூரில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இராமநாதபுரத்துக்குச் செல்கிறார். பின்னா் அவர், அரசு விருந்தினா் மாளிகைக்குச் சென்று ஓய்வு எடுக்க உள்ளார். தொடா்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ட்ரோன் பறக்க மாவட்ட காவல்துறை தடை விதித்ததுடன், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Advertisements
