R. N. Ravi Vs K. Ponmudy: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை.. பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு!

Advertisements

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்குப் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையால் பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் எம்எல்ஏ பதவியைப் பொன்முடி பெற்றார். இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி குற்றவாளி தானெனத் தெரிவித்திருந்தார். எனவே அரசியல் சாசனம் படி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்பட்ட நிலையில், பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம் என அதிரடியாகத் தெரிவித்திருந்தது. இதனையடுத்து ஆளுநர் ரவி நேற்று சட்டவல்லுநர்களோடு ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வழக்கு விசாரணை இன்னும் சிறிது நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் உள்ள ராஜ்பவனில் பிற்பகல் 3.30 மணிக்குப் பதவி பிரமாணம் நடைபெறுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *