
தில்லிச் செங்கோட்டையில் நடைபெற்ற தசராவிழாக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
விஜய தசமிநாளையொட்டித் தில்லிச் செங்கோட்டையில் ராம் லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார்.
இராமர் சீதை இலட்சுமணன் அனுமன் வேடமிட்டவர்கள் இராமாயணக் கதையை நடித்துக காட்டினர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்ட விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
ராம்லீலை நிகழ்ச்சியின் இறுதியில் இராவணன் உருவப்பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது.
