
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி அட்டகாசத்தால் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்கபும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் புதுப்பானையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு கொண்டாடினர். இவ்விழா நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் கலர் புகையை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கல்லுரி மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்தும் அதைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



