கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.!

Advertisements

மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு தமிழன்பன் மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்றப் பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவரின் கவிதைத் தொகுப்பான வணக்கம் வள்ளுவ நூலுக்காக 2004 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இந்நிலையில், அவர் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த நிலையில், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதில், அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *