
டோக்கியோவில் நடைபெற்ற மன்றக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லியிலிருந்து புறப்பட்டு டோக்கியோவிற்குச் சென்ற அடைந்தார். இந்நிலையில், விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், பிரதமர் மோடி டோக்கியோவில் நடைபெறும் இந்தியா மற்றும் ஜப்பான் பொருளாதார மன்றக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியபோது, இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது எனவும், உலகில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது எனவும், மேலும் அவர், இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது எனவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது எனவும் கூறினார்.


