Pakistan bomb blast: 35 பேர் பலி!

Advertisements

பயங்கர குண்டு வெடிப்பு, 35 பேர் பலி, 70 பேர் காயம்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே சக்தி வாய்ந்த  குண்டு வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்தனர். மஸ்துங் மாவத்தில் முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபியின் பிறந்த நாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த மசூதிக்கு அருகே இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இதுகுறித்து மஸ்துங் உதவி ஆணையர் அட்டா உல் முனிம் கூறுகையில், மதீனா மசூதிக்கு அருகில் இந்தக்குண்டு வெடிப்பு  நிகழ்ந்துள்ளது. இதில் காயமுற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டுள்ளனர். காயமடைந்தவகளில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *